மாவனெல்லை நகரில் இடம்பெற்ற வெசாக் பெரஹராவின் இறுதியில் யானையொன்று குழம்பியுள்ளது.
இவ்வாறு குழம்பிய யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 8:00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கண்டி தலதா மாளிகையில் உள்ள யானை வகையை சேர்ந்த ராஜா என்ற யானையே இவ்வாறு குழம்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குழம்பியப்படி மாவனெல்லை நகருக்குள் வந்த யானை, தற்போது மாவனெல்லை சந்தை பகுதியில் விசேட பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.