ரியாத்(22 செப் 2017): சவூதியில் சில செயலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஸ்கைப், வாட்ஸ்அப், வைபர், போன்ற குரல் மற்றும் வீடியோ அழைப்பு செயலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சவூதி அரேபியா நீக்கியுள்ளது. உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவினால் சவூதியில் வசிக்கும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாட்டினர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதேவேளை தடை நீக்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்து இதுபோன்ற செயலிகள் மிகுந்த கண்காணிப்பில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை வாட்ஸ் அப் அழைப்புகள் தொடர்ந்து செயல்படாமல் உள்ளதாகவே சிலர் தெரிவித்துள்ளனர்.