அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள தாழ்நிலங்களுக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களில் அடுத்த 48 மணித்தியாலங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, தாழ்நிலப்பகுதியினூடான சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால், அப்பகுதிகளை அண்மித்த வீதிகளில் பயணிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தனகலு ஓயாவை சூழவுள்ள மக்களுக்கு எச்சரிக்கை
