சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்பவர்கள் இனிமேல் மனநலம் தொடர்பான மருத்துவச் சான்றிதழையும் கட்டாயம் வழங்க வேண்டும் என வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை தெரிவித் துள்ளது.
தற்போது சாரதி விண்ணப்பப் பத் பெற்றுக்கொள்வதற்கு போக்குவரத்து மருத்துவ நிறுவனத் திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உடல் ஆரோக்கியம் சம்பந்தமான மருத்துவ சான்றிதழ் போதுமானதாக உள்ளது.
இந்நிலையில் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன என்பதால் இத்தீர்மானத்தை எடுத் துள்ளதாக விதி பாதுகாப்பு தொடர் பான தேசிய சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோதாகொட தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன “என்றும் விரைவில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை சமர்ப்பிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் மோட்டார் வாகன திருத்த சட்டமூம் அண்மையில் பாராளுமன்றத் தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற் றுக்கொள்வோர் மனநலம் தொடர் பான மருத்துவ சான்றிதழ் வழங்கு வது கட்தாயம் எனவும் மேற்படி மனநல மருத்துவ சான்றிதழ் வழங்காத சாரதிகளுக்கு இனிமேல் சாரதி விண்ணப்பப்பத்திரம் வழங்கப் படமாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.