• Sun. Oct 12th, 2025

பங்களாதேஷை வீழ்த்தியது இந்தியா!

Byadmin

Jun 23, 2024

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 50 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
North Soundயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Hardik Pandya அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களை பெற்றதுடன், Virat Kohli 37 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் Tanzim Hasan Sakib மற்றும் Rishad Hossain ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் Najmul Hossain Shanto அதிகபட்சமாக 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Kuldeep Yadav 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *