• Fri. Oct 17th, 2025

உயர் தரம் சித்தியடைந்த மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்!

Byadmin

Jul 7, 2024

2022 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கற்கைநெறிகளை தொடர்வதற்கு வட்டியில்லா கடன் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச பல்கலைக்கழகங்களுக்கு நுழைவதற்கு வாய்ப்பு கிடைக்காத உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களுக்காக இந்த வட்டியில்லாக் கடன் திட்டம், 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், அதிகபட்சமாக 08 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.
கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட 17 அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் 100 பட்டப்படிப்புகளை கற்பதற்கு ஏழு மாணவர் குழுக்களின் கீழ் உள்ள 17,313 மாணவர்களுக்கு ஏற்கனவே கடன் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் இந்தக் கடன் திட்டத்தின் எட்டாவது தொகுதியாக உள்வாங்கப்படவுள்ளதுடன், அது தொடர்பில் அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் வழங்கப்படவுள்ள உத்தேச கற்கைநெறிகள் தொடர்பான முன்மொழிவுகள் தற்போது அழைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *