• Sat. Apr 4th, 2026

லண்டனில் மாஸ் காட்டும் ரோகித்!

Byadmin

Jul 12, 2024

டென்னிஸ் போட்டியில் ஆண்டு தோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. தற்போது விம்பிள்டன் தொடரில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டேனில் மெத்வதேவ் மற்றும் கார்லோஸ் அல்காரஸ் ஆகியோர் மோதி வருகின்றனர்.

இந்நிலையில், விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் அரையிறுதி போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கண்டு ரசித்தார். இதுதொடர்பான புகைப்படம் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு ரோகித் சர்மா பங்கேற்ற முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *