• Mon. Oct 13th, 2025

தந்தையின் கடனை அடைத்த மகள்

Byadmin

Jul 13, 2024

கேரளா,மலப்புரம் மாவட்டம் கருவறக்குண்டு என்ற பகுதியை சேர்ந்தவர் இப்ராஹிம், இவரது மகள் பாத்திமா நவ்ஷா (வயது 9) , நான்காம் வகுப்பு படிக்கும் நவ்ஷாவுக்கு இருபது ரூபாய் தாள் மீது கொள்ளை பிரியம். 

கடந்த இரண்டாண்டுகளாக தனக்கு கிடைக்கும் இருபது ரூபாய் தாள்களை சேகரிக்க தொடங்கியுள்ளார். மகளின் ஆர்வத்தை பார்த்த தந்தையும் தன்னிடம் வரும் தாள்களையும் மகளிடம் கொடுத்து அவளது சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த, கடந்த வாரம் நவ்ஷா தனது சேமிப்பிக்கிடங்கிலுள்ள தாள்களை எண்ணிப்பார்க்க அதில் மொத்தமாக 1,03,000 ரூபாய்  இருந்துள்ளது.

அதனை தன் தந்தையிடம் எடுத்துக் கொடுக்க, தந்தை தனக்கு இருந்த கடன்களை அடைத்துவிட்டு மீதமுள்ள காசில் மகளுக்கு ஒரு பரிசுப்பொருளும் வாங்கி கொடுத்தாராம். தந்தையின் ஊக்கமும் மகள் பெற்ற பொறுப்பும் இங்கே மெச்சத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *