• Mon. Oct 13th, 2025

இந்தியாவை உலுக்கும் மற்றொரு வைரஸ் 

Byadmin

Jul 20, 2024

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் சண்டிபுரா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. 
கொரோனா தொற்று பீதி ஓய்ந்திருக்கும் நிலையில், தற்போது இந்தியாவின் வட மாநிலங்களில் ‘சண்டிபுரா வைரஸ்’ தொற்று புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 
9 மாதங்கள் முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளை மட்டும் குறிவைத்து தாக்கும் சண்டிபுரா வைரஸால் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் 8-10 மணி நேரத்தில் உயிரிழந்துவிடுவார்கள் என்பதால் குழந்தைகளுடன் பெற்றோர்கள் மருத்துவமனை நோக்கி படையெடுத்திருக்கின்றனர்.
இந்த வைரஸ் கொசு, மணல் ஈ மற்றும் உண்ணி உள்ளிட்டவற்றால் பரவுகிறது. சாதாரண காய்ச்சல் போல இருப்பதால் மக்களால் இதை அடையாளம் காண முடிவதில்லை. 
இந்நிலையில், குஜராத்தில் மர்ம காய்ச்சல் காரணமாக அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ஒரு குழந்தை கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. குழந்தையின் ரத்த மாதிரியை மருத்துவர்கள் புனே தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர். 
ஆய்வின் முடிவில், குழந்தை சண்டிபுரா வைரஸ் தொற்றால்தான் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 
இதே அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த ராஜ்கோட்டில் 3, அகமதாபாத்தில் 2, பஞ்ச்மஹாலில் ஒரு குழந்தை என 6 குழந்தைகள் சண்டிபுரா வைரஸால் உயிரிழந்துள்ளது. 
அத்துடன் சந்தேகத்திற்கிடமான வகையில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சண்டிபுரா வைரஸ் தொற்றால் குழந்தைகள் உள்பட 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *