இணையத்துல இந்த வீட்டோட புகைப்படம் நிறையபேர் பகிர்ந்திருந்தாங்க…
பாக்க எவ்வளவு அழகா இருக்கு..??
அன்றையநாள் யாரோ ஒருவரின்
உழைப்பும் பெருங்கனவாகவும் இந்த வீடு இருந்திருக்க கூடும்…
ஒரு தந்தை தாய் குழந்தைகள்,
என்று ஒரு குடும்பமாக வாழ்ந்திருக்க கூடும்…
ஒரு இல்லத்தரசியின் கட்டுப்பாட்டில் தினமும் சுத்தம் செய்து பேணி பாதுகாகக்க பட்டிருக்கும்…
குழந்தைகள் ஓடியாடி விளையாடியிருக்க கூடும்…
கணவன்,மனைவி அன்னியோன்னியமான ஒரு குடும்ப பிணைப்பில் இருந்திருக்க கூடும்…
இவ்வீட்டின் சமையலறையில் நிறைய சமைத்திருக்க கூடும்…
பண்டிகை நாட்களில் பலகாரங்களும், புது துணிகளுமாய் வீடு கலைகட்டியிருந்திருக்க கூடும்…
அந்த வீட்டின் உரிமையாளரின் பெரிய சொத்தாக இந்த வீடு இருந்திருக்க கூடும்…
நிம்மதியாக அந்த குடும்பம் உறங்கியிருக்க கூடும்…
சில வேலைகளில் கணவன் மனைவி சண்டைகளும்,
குழந்தைகளின் விளையாட்டும் கொண்டாட்டமுமாய் இருந்த குரல்கள் அவ்வீட்டில் ஒலித்திருக்க கூடும்…
அந்த திண்ணையில் அவ்வீட்டின் தாத்தா பாட்டிகள் அமர்ந்து அரட்டை அடித்திருக்க கூடும்…
அக்கம் பக்கத்தினர் மெச்சு வீடு என்று பிரம்மாண்டமாக அன்னார்ந்து பார்த்து சென்றிருக்க கூடும்…
உறவினர்களும்,
விருந்தினரும் வந்து தங்கி சென்றிருக்க கூடும்…
ஆனால் இதோ இன்று அந்த களைகளும்,பொலிவும் இழந்து
வெறும் ஒரு பழமையான கட்டிடமாக கேட்பாரற்று வீதியில் விட்ட குழந்தையை போல் நிர்கதியாக நிற்கின்றது இந்த வீடு..
🥺🥺💔