பாய் வீட்டு நெய்சோறு, பிரியாணிக்கு அப்பறம் நாங்க அதிகமா சமிக்குறது இந்த நெய் சோறுதான் … தனி ருசிதான்
ஒரு பெரிய பாத்திரத்தில் 6 ஸ்பூன் நெய் அதன்கூடவே 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்துவிடனும்
சூடு வந்த பிறகு பட்டை லவங்கம் ஏலக்காய் 3 சேர்க்க வேண்டும்
2 வெங்காயம் , 2 தக்காளி ,3 ஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்ட் , 3 பச்சைமிளகாய் சேர்த்து வதக்கிவிடவும்
1 கை பிடி புதினா , பாதி கைப்பிடி கொத்துமல்லி உப்பு சேர்த்து நன்கு வதக்கி விடவும்
6 டம்பளர் தண்ணீர் உடன் சேர்ந்த தேங்காய்ப்பால் சேர்த்து
ஒரு கொதி வந்த பிறகு 3 டம்பளர் சீராக சம்பா அரிசி சேர்த்து மூடிபோட்டு வேகவைக்கவேண்டும்
தண்ணீரும் அரிசியும் சரிசமமா வந்தவுடன் 15 நிமிடம் தம் போட்டு இறக்கினால் ருசியான நெய்ச்சொறு ரெடி