தேவையான பொருட்கள் :
சென்னா (கொண்டைக்கடலை) – ஒரு கப்,
இஞ்சி – சிறிய துண்டு,
சோம்பு – அரை டீஸ்பூன்,
மிளகு – கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 3,
புதினா – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
நன்றாக ஊறியதும் அதனுடன் தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, மிளகு, புதினா, உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும் (தேவைப்பட்டால் 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு சேர்க்கவும்).
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால்… கொண்டைக்கடலை வடை தயார்…