தேவையான பொருட்கள் :::
தோல் சீவி சதுரமாக நறுக்கிய பறங்கிக்காய், வடித்த சாதம் – தலா ஒரு கப் தோல் சீவிப் பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன் தேங்காய்த் துருவல் – அரை கப் தனியாத்தூள் (மல்லித்தூள்) – அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன் (அலசி, ஆய்ந்தது) பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – கால் கப் கறிவேப்பிலை – சிறிதளவு கடுகு – ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் – ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 (நீளவாக்கில் கீறவும்) வெந்தயம் – அரை டீஸ்பூன் பிரியாணி இலை, கிராம்பு – தலா ஒன்று மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை::::
வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, கடலைப்பருப்பு, சீரகம் தாளிக்கவும். அதனுடன் கிராம்பு, பிரியாணி இலை, சின்ன வெங்காயம், இஞ்சி, வெந்தயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு கால் கப் தேங்காய்த் துருவல், பறங்கிக்காய்த் துண்டுகள், உப்பு, தனியாத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். பிறகு அதனுடன் மீதமுள்ள தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும். பறங்கி மசாலா ரெடி. இதனுடன் சாதம், சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். தயிர்ப் பச்சடியுடன் பரிமாறவும்….
#cookinghacks