தேவையானவை:::
பால், டீத்தூள், சர்க்கரை – தேவையான அளவு. மசாலா பொடிக்கு: சுக்கு – 4 , கிராம்பு – 4, ஏலக்காய் – 4, பட்டை – 1, ஜாதிக்காய் – மிளகு அளவு.
செய்முறை::::
மசாலா பொடிக்கு தேவையான பொருட்களை வெறும் கடாயில் வறுத்து, பொடி செய்து சலித்து, டப்பாவில் போட்டு வைக்கவும். தேவையான பால், தண்ணீர் கலந்து அடுப்பில் வைக்கவும். சூடாகி வரும் சமயம் டீத்தூள், சிறிதளவு மசாலா பொடி போட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்து வந்ததும் வடிகட்டி சர்க்கரை சேர்த்துப் பருகவும்…