விவாகரத்து செய்வதற்கும் துணிவில்லாமல், சேர்ந்து வாழவும் மனமில்லாமல், இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவிக்கும் பிழைப்பு இருக்கிறதே அது பிழைப்பல்ல கொடூரமான தவணைச்சாவு.
முழுதும் முரண்பாடான வாழ்க்கைத் துணையுடன், சமூகமதிப்பு மற்றும் தன் பிள்ளைகளின் நலன் கருதி, இறுதிவரை தனக்காக வாழாமல் தன் பிள்ளைகளுக்காகவும் வெளியே சிரித்துக் கொண்டு, உள்ளே நொந்து கொண்டு, அளவுக்கதிகமான சகிப்புத் தன்மையுடன் வாழும் வாழ்க்கை இருக்கே அது மரணத்தை விட கொடுமையானது.
இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான்..