ஹெந்தல, வத்தளை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மற்றும் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது, முச்சக்கரவண்டியின் உரிமையாளரின் தரப்பினால் வேன் சாரதி தாக்கப்பட்டு தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஹெந்தல வத்தளை பிரதேசத்தில் நேற்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலை வேனின் சாரதி தனது கைப்பேசியில் பதிவு செய்திருந்தார்.
“முச்சக்கர வண்டியில் இருந்தவர் என்னிடம் பணம் கேட்டார், பணம் கொடுக்கும் அளவுக்கு சேதம் இல்லை என்று நான் கூறியதும், கண்ணாடியை தானே உடைத்து, பின்னர் பணம் கேட்டார், பிறகு என்னால் முடியாது என்று கூறியபோது, கோல் செய்து இருவரை அழைத்து என்னை தாக்கினார்.
வாகன விபத்தின் பின்னர் இடம்பெற்ற கொலைவெறி தாக்குதல்!
