விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளின் ஓட்டுனரும் மற்றும் பின்னால் சென்ற இருவரும் தலைக்கவசம் அணியாமல் வெலிகம்பிட்டியவிலிருந்து கொழும்பு – நீர்கொழும்பு வீதியை நோக்கி பயணித்த போது, வெலிகம்பிட்டிய சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரிகள் சமிக்ஞை செய்தனர்.
இதன்போது, பொலிஸாரின் கட்டளையையும் மீறி மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் பிரதான வீதியை நோக்கிச் ஓட்டுனர் செலுத்தியுள்ளார்.
இதன்போது, பின் இலக்கத் தகடு இன்றி பயணித்த மோட்டார் சைக்கிள் நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியிக்கு பிரவேசித்த நிலையில் நீர்கொழும்பிலிருந்து வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தை அடுத்து ஏனைய இருவரும் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.