• Sat. Oct 11th, 2025

இங்கிலாந்து அணிக்கு புதிய வீரர்!

Byadmin

Aug 26, 2024

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் எஞ்சிய 2 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் புதிய வேகப்பந்து வீச்சாளர் Josh Hull அழைக்கப்பட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்ட Mark Wood, எஞ்சிய 2 போட்டிகளில் விளையாட முடியாது என மருத்துவ பரிந்துரைகளை பெற்றதை அடுத்து இங்கிலாந்து அணிக்கு Josh Hull அழைக்கப்பட்டுள்ளார்.

அவர் Leicestershire பிராந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் Josh Hull 20 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.

எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் விளையாடாத Josh Hull இதுவரை 9 முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

எனினும் இலங்கை அணி இங்கிலாந்து தொடரை ஆரம்பிப்பதற்கு முன்னர் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான ஒரேயொரு பயிற்சிப் போட்டியில் Josh Hull விளையாடியதோடு, அந்தப் போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *