தற்போது வெற்றிடமாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கருணாரத்ன பரணவிதானவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தமது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் வெற்றிடமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.