ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் உதித் லொக்குபண்டார, இன்று (28) பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்திற்கு சென்றிருந்தார்.
உதித் லொக்குபண்டார, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றினார்.
பொதுஜன பெரமுனவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காகவே அவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் உதித் லொகுபண்டார ஊடகங்களுக்கு கருத்து எதுவும் தெரிவிக்காமல் வெளியேறினார்.
இந்தக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் டி. வீரசிங்க குறிப்பிடுகையில்,
“உதித் லொகுபண்டாரவுக்கும் இது தான் தாய் வீடு, வரவேண்டுமானால் வரலாம். ஆனால் அவர் வந்து வேறு யாராவது கிளம்பும்போது… இதனை பொது மக்கள் மிகவும் கேவலமாகத் பார்ப்பார்கள்.” என்றார்.