• Sat. Oct 25th, 2025

வர்த்தக நிலையம் ஒன்றில் பாரிய தீ பரவல்

Byadmin

Sep 7, 2024

பொலன்னறுவை கதுருவெல வீதியிலுள்ள வணிக வளாகத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளது.

இன்று (07) இரவு இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயை அணைக்கும் பணியில் பொலன்னறுவை தீயணைப்பு பிரிவினரால் 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ பரவாமல் தடுக்க இராணுவம், பொலிஸார் மற்றும் விமானப்படையினர் இணைந்து செயற்பட்டு வருவதாகவும், தீ பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

இதன் காரணமாக மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியின் ஒரு பகுதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், போக்குவரத்துக்கு எவ்வித தடையும் இல்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *