அப்புத்தளையில் பயணிகள் பஸ் விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சேர்கக்ப்பட்டடுள்ளனர். ஆனால் இந்த பஸ்ஸின் சாரதி உயிரிழந்தார்.
இதுகுறித்து சம்பவ இடத்திச் சென்ற ஊடகவியலாளர் புஸ்பராஜ் மகேஸ், தகவல் தந்தார்.
”அப்புத்தளையில் இருந்து கொஸ்கம நோக்கி பஸ் பயணித்துள்ளது. மேலே விகாரகள கல்கந்த என்ற இடத்தில மாலை 5 மணி அளவில் தான் இந்த விபத்து நடந்துள்ளது.
பஸ்சில் திடீரென ”பிரேக்” வேலை செய்யவில்லையாம். ட்ரைவர் மிகச் சாதுர்யமாக செயல்பட்டுள்ளார். மறுபுறம் சுமார் 300 அடி பள்ளம். இறுதி சில விநாடிகளில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. பயணிகளின் உயிரை மட்டுமே ட்ரைவர் காப்பாற்ற நினைத்திருக்கிறார்.
அதனால் அவர் தனது உயிரை இழந்துவிட்டார். அவர் சரியான முடிவை எடுத்திருக்காவிட்டால், இந்த விபத்தில் பல உயிர்கள் போய் இருக்கும். அவ்வளவு பெரிய பள்ளம். ட்ரைவரின் செயலை பஸ்ஸில் பயணித்தவர்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.” என்று எமது செய்தியாளர் தகவல் தந்தார்.
இவ்வாறான ஆபத்தான தருணங்களில் மனோவியலின் அடிப்படையில் ஒரு மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலே மனித மனம் செயல்படும். ஆனாலும், பயணிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இறுதி நேரத்தில் இந்த துணிச்சாலான செயலைச் செய்து அந்த பேருந்து சாரதி தனது உயிரை விட்டுள்ளார். பல உயிர்களைக் காத்த அந்த சாரதி ஒரு தேசிய வீரரே.
தகவல் : P.மகேஸ்