• Sat. Oct 11th, 2025

சக மாணவியை கர்ப்பிணியாக்கிய மாணவன் கைது

Byadmin

Sep 29, 2024

பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்றுவரும் 16 வயது மாணவியை 2 மாத கர்ப்பிணியாக்கிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த அதே தரத்தில் கல்வி கற்றுவரும் 16 வயதுடைய மாணவன் ஒருவர் நேற்று (27) கைது செய்யப்பட்ட சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் வசித்துவரும் 16 வயது சிறுமியின் தாயார் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ள நிலையில், அவரின் அம்மம்மாவின் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார்.

அதேவேளை சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுவனின் தந்தை உயிரிழந்துள்ள நிலையில், அவரின் தாயாரும் வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளதுடன் அம்மம்மாவின் பாதுகாப்பில் சிறுவனும் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், இருவரும் ஒரே வகுப்பில் கல்வி கற்று வந்துள்ள நிலையில், சிறுவனின் வீட்டிற்கு கல்வி கற்பதற்காக சிறுமி சென்று வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் ஏற்பட்ட காதல் காரணமாக சிறுமியை சிறுவன் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதையிட்டு அவரை நேற்றைய தினம் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ள நிலையில், சிறுமி 2 மாத கர்ப்பிணியாக உள்ளமை தெரியவந்ததையடுத்து வைத்தியர் பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.

பின்னர் சிறுமியை கர்ப்பிணியாக்கிய 16 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *