• Sat. Oct 11th, 2025

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 75 % தொகுதிகளை நாம் கைப்பற்றுவோம்

Byadmin

Oct 6, 2017

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் நாடு­பூ­ரா­கவும் உள்ள தேர்தல்தொகு­தி­களில் 75 சத­வீ­த­மான தொகு­தி­களை ஐக்­கியதேசிய முன்­னணி கைப்­பற்றும் என்­ப­தனை தம­து ­கட்சிகணக்­கிட்­டுள்­ள­தாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாஷிம் தெரி­வித்தார்.

அத்­துடன் வேட்­பா­ளர்­களை  தெரிவு செய்­வ­தற்­கான இறுதிதீர்­மானம் எடுப்­ப­தற்கு­

பி­ர­தமர் தலை­மையில் வேட்பு மனு குழு­வொன்று நிய­மிக்­கப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார். 

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் தொடர்­பாக கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் கபீர் ஹாஷிம் மேலும் குறிப்­பி­டு­கையில்,

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்கு தற்­போது நாம் தயா­ராகிவரு­கின்றோம். இதன்­படி மாவட்ட அடிப்­ப­டையில் வேட்­பா­ளர்­களை தெரிவு செய்­வ­தற்கு மாவட்­டங்கள் வாயி­லாக சிறி­கொத்தா வேட்­பாளர் தெரி­வு­க்குழு பய­ணித்த வண்ணம் உள்­ளது.இந்த வாரம் அநு­ரா­த­புரம், பொல­ன­றுவை மாவட்­டங்­க­ளுக்கு தெரி­வுக்­குழு பய­ணிக்­க­வுள்­ளது.அதே­போன்றுஏனைய அனைத்து மாவட்­டங்­க­ளுக்கும் பய­ணித்து வேட்­பா­ளர்­களை தெரிவு செய்ய திட்­ட­மிட்­டுள்ளோம்.

ஐக்­கிய தேசியக் கட்சி வேட்­பா­ளர்கள் தெரிவில் கிரா­மத்தில்உள்ள பிர­ப­லங்­களை கள­மி­றக்க திட்­ட­மிட்­டுள்ளோம்.இதன்­படி சிறி­கொத்தா தெரி­வு­க் கு­ழு­வினால்தயார் செய்யும் வேட்­பா­ளர்­களை தெரிவு செய்­வ­தற்­கானஇறுதி தீர்­மானம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நிய­மிக்கும் குழு­வினால் எடுக்­கப்­படும். விரைவில்குறித்த குழு நிய­மனம் செய்­யப்­படும்.

இந்­நி­லையில் தற்­போது கட்­சி­யினால் கணக்­கீடு ஒன்றுசெய்­யப்­பட்­டுள்­ளது. இந்த கணக்கின்படி நாடு­பூ­ரா­கவும்உள்ள தேர்தல் தொகு­தி­களில் 75 சத­வீ­த­மான தொகு­தி­களைஐக்­கிய தேசிய முன்­னணி கைப்­பற்றும். அத்­துடன் தற்­போதுஇந்த ஆட்­சியின் மீது ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரே நம்­பிக்கை இழந்­தது போல் செயற்­ப­டு­கின்­றனர். இரு வரு­டங்­களில் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்று அஞ்­சு­கின்­றனர். எனினும் நான் ஒன்றை கூற விரும்­பு­கின்றேன். நாம் இருவரு­டங்­க­ளுக்கு ஆட்சி செய்ய வர­வில்லை. இம்முறை அதுநடக்­காது. 2020 ஆம் ஆண்டு ஆட்சி முடித்­துக்­கொண்டுவிடாமல் 2025 வரையும் ஆட்­சியை கொண்டு செல்வோம். அது­மட்­டு­மல்­லாமல் 2025 ஆம் ஆண்­டுக்கு அப்­பாலும் ஐக்­கியதேசியக் கட்­சியின் ஆட்சியை கொண்டு செல்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *