• Sun. Oct 12th, 2025

பெண்கள் சில சமயம் வீட்டில் ஏன் உரத்த குரலில் சத்தமிடுகிறார்கள் தெரியுமா…?

Byadmin

Oct 8, 2024

பெரும்பாலான ஆண்கள் வீட்டில் தங்கள் மனைவிமார்கள் வெளிப்படுத்தும் அதீத சத்தத்தால் எரிச்சல் அடைகின்றனர். ஏன் என்ன காரணம் என்று தெரியாமல் திண்டாடுகின்றனர்.

இத்தகைய அவர்களின் போக்குக்கான பல உளவியல் காரணங்கள் உள்ளன.குறிப்பாக அவர்களின் நெஞ்சில் புதைந்துள்ள உடலியல் மற்றும் உளவியல் ரீதியான அழுத்தங்களின் வெடிப்புக்கள் எனலாம்.

🔥 அளவுக்கதிக வீட்டுப் பணிகளின் அழுத்தம் காரணமாக இருக்கலாம்.

🔥 அவர்கள் இருக்கும் சுற்றுச்சூழல் பொருத்தமானதாக இருக்காது. அதனால் அவர்கள் அதிலே சமநிலை காண போராடும் போராட்டத்தின் வெளிப்பாடாக இருக்கலாம்.

🔥 அவர்கள் ஏதாவது (பர்பெஃக்ட்டை)
எதிர்பார்ப்பதன் வெளிப்பாடாக இருக்கலாம். (அன்பான கணவன் / சொல் பேச்சு கேட்கும் நல்ல குழந்தைகள்/ விருப்பமான சூழல்).

🔥 (அன்புக்கு பஞ்சம்) அதவாது எதிர்பார்த்த அன்பும் பாசமும் கிடைக்கப் பெறாத சூழலாக இருக்கலாம்.

🔥 குடும்ப அங்கத்தவர்களால் ஒதுக்கப்படுவதும் புறக்கணிக்கப்படுவதும் காரணமாக இருக்கலாம்.

🔥 நீ அவளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாய்
என்பதை உணர்த்தாமல் இருப்பதால் அவள் விரக்தியில் இருக்கலாம்.

🔥 நீ அவளுடன் வீட்டு வேலைகளில் ஒத்துழைக்காமலும் ரொமென்டிக்காக நடக்காமல் இருப்பதால் இருக்கலாம்.

🔥 அவளுடைய எதிர்கால லட்சியங்களான கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்கள் பரிபோன கவலையில் இருக்கலாம்.

🔥 உடலியல் ரீதியான ஹார்மோன் மாற்றங்களாகவும் இருக்கலாம்.

🔥 அன்றாடம் விரும்மபி எடுத்து வரும் டயட்டில் குறைபாடுகள் இருப்பதன் வெளிப்பாடாக இருக்கலாம்.

🔥 குழந்தைகளுடன் வீட்டில் நீண்ட நேரம் ஓய்வின்றி அமர்ந்திருப்பதால் ஏற்படும் எரிச்சலாக இருக்கலாம்.

ஆண்பெருமக்களே…!
காதலிலும் கவனிப்பிலும் கூடுதல் கரிசனை காட்டுங்கள். நீதியாக நியாயமாக நடந்துகொள்ளுங்கள். தாய், தாரம் மற்றும் குழந்தைகளின் விவகாரங்கள் இலேசான காரியங்கள் அல்ல.

எப்போதும் அவர்களுக்கு சுடுமஅ வெயிலில் நிழலாகவும் கொட்டும் மழையில் குடையாகவும் இருக்கப் பாருங்கள். அனைத்திற்கும் மேலாக அன்றாட ரோடினை உடைத்து விடுங்கள். அடிக்கடி சின்னச் சின்ன அன்பான அன்பளிப்புக்களை,அதிர்ச்சிப் பரிசில்களை வழங்குங்கள்.

இறைவா…!
ஆனந்தம் மங்காத, ரகசியம் கசியாத, அன்பு வற்றாத, வளம் குறையாத, பாதை தடைப்படாத, சோர்வு தவழாத, துன்பம் தொத்தாத, அருளும் ஆசிர்வாதமும் என்றும் நீங்காத இல்வாழ்வை வழங்குவாயாக.

✍ தமிழாக்கம் / imran farook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *