• Sun. Oct 12th, 2025

இலங்கைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வெற்றி இலக்கு

Byadmin

Oct 20, 2024

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில். ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி அந்த அணி 38.3 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 185 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Sherfane Rutherford 74 ஓட்டங்களையும், Roston Chase 33 ஓட்டங்களையும் பெற்று ஆடுகளத்தில் இருந்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Wanindu Hasaranga 02 விக்கெட்டுக்களையும் Jeffrey Vandersay மற்றும் Charith Asalanka ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தியிருந்தனர்.

இந்நிலையில், டக்வத் லூயிஸ் முறைப்படி போட்டி 37 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கை அணிக்கு 37 ஓவர்களில் 232 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *