• Mon. Oct 13th, 2025

டிஜிட்டல் வலயங்களை உருவாக்க அரசு அவதானம்

Byadmin

Oct 25, 2024

அரசாங்க சேவையை இலகுபடுத்துவதற்கும் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதற்கும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை தகவல் தொழில்நுட்ப பட்டய நிறுவனத்தின் 26வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தற்போதைய அரசாங்கம் நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கான தெளிவான பார்வையை கொண்டுள்ளது.

தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குதல் ஆகியவற்றின் அடிப்படையிலான கொள்கை நாட்டுக்கு தேவை.

இதன்படி யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு டிஜிட்டல் வலயங்களை உருவாக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

சர்வதேச டிஜிட்டல் நிறுவனங்களுக்கும் உள்ளூர் தகவல் தொடர்பு கண்டுபிடிப்பாளர்களுக்கும் இடையே உறவை ஏற்படுத்துவதும் அவசியம்.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பக் கல்வியை ஊக்குவிப்பது, அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, தொழில் வல்லுனர்களுக்கு தேவையான கொடுப்பனவுகளை வழங்குவது முக்கியம்.

டிஜிட்டல் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், அதற்கு அனைவரின் ஆதரவும் தேவை என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *