• Sun. Oct 12th, 2025

ஜனாதிபதியுடன் முரண்பாடா..? பிரதமரின் அதிரடி பதில்

Byadmin

Oct 26, 2024

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் தமக்கு எவ்வித முரண்பாடுகளும் இல்லை என, பிரதமர் ஹரிணி அமசூரிய தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அத்திடிய பொலவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினரை நியமிப்பது தொடர்பில் தனக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக நேற்று வெளியான செய்தி பொய்யான ஒன்று.

எமக்கு இடையில் போட்டி இல்லை எனவும் இவ்வாறான பொய்ப் பிரசாரங்கள் எப்போது முடிவுக்கு வரும் எனவும் பிரதமர் மேலும் கேள்வி எழுப்பினார்.

அச்சம் இல்லாத வகையில் இந்த நாடு நிச்சயம் கட்டியெழுப்பப்படும் என பிரதமர் மக்களிடம் தெரிவித்தார். நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எங்களுக்கு கிடைத்த வாக்குகள் மூன்று சதவீதமாக இருந்த போதிலும், நாங்கள் இந்தப் போராட்டத்தை கைவிடவில்லை.

அன்று சிரித்தவர்கள் இன்று நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் ஓடிவிட்டனர் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *