• Mon. Oct 13th, 2025

ஓர் இளைஞன் தன் தந்தையை பார்த்து கேட்டான்….

Byadmin

Nov 9, 2024

”செல்போன், டிவி, கம்ப்யூட்டர், இண்டர்னெட்
ஏ.சி, வாஷிங் மெஷின்,
கேஸ் கனெக்‌ஷன், மிக்ஸி, கிரைன்டர், இவை எல்லாம் இல்லாமல் உங்களால் எப்படி வாழ முடிந்தது?”.

தந்தை பதில் கூறினார்,
“மரியாதை, மானம், மதிப்பு,
வெட்கம், உண்மை, நற்குணம், நன்னடத்தை, நேர்மை, தெய்வ பக்தி, தர்மம், ஒழுக்கம் இவை அனத்தும் இல்லாமல் இப்போது நீங்கள் எப்படி வாழப் பழகி விட்டீர்களோ, அப்படித் தான் நாங்களும் வாழ்ந்தோம்… 1940-1990 க்குள் பிறந்த நாங்கள் உண்மையாகவே வரம் பெற்றவர்கள்,

நாங்கள் சைக்கிள் ஒட்டினோம், ஹெல்மெட் அணியவில்லை,

பள்ளி முடிந்ததும் தோழர்களுடன்
பொழுது சாயும் வரை விளையாடினோம்… டி.வியின் முன் உட்கார்ந்ததில்லை..

உயிருள்ள தோழர்களுடன் விளையாடினோம். இண்டெர்நெட்டில் அல்ல..

தாகம் எடுக்கும்போது குழாய் தண்ணீர் குடித்தோம், மினரல் வாட்டர் அல்ல..

ஒரே தம்ளர் ஜூஸை மாற்றி மாற்றி நான்கு நண்பர்களும் குடிப்போம். எந்த தொற்று நோயும் வந்ததில்லை,

தினமும் அரிசி சாதம் தின்போம். ஆனாலும் எடை கூடியதில்லை. சர்க்கரை நோய் வந்ததில்லை.

எங்கு போனாலும் வெறுங்காலுடன் நடப்போம், எந்த பாதிப்பும் வந்ததில்லை,

எங்கள் பெற்றோர் எந்த ஊட்ட சத்து உணவும் தந்ததில்லை. ஆனாலும் ஆரோக்கியமாகவே இருந்தோம்,

எங்கள் பெற்றோர்கள் பணக்காரர்கள் அல்ல, ஆனாலும் அன்புக்கும் பாசத்துக்கும் பஞ்சம் இல்லை,

பெற்றோர்களோடு படுத்து உறங்கினோம். ஹாஸ்டல் அறைகளில் அல்ல,

உறவினர்கள், மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு, முன்னறிவிப்பின்றி போவோம். வரவேற்பிற்கும், விருந்திற்கும் குறை இருந்ததில்லை,

எங்களின் போட்டோக்கள் எல்லாம் கருப்பு வெள்ளைதான். ஆனால் எங்களின் நினைவுகளோ வண்ண மயமானவைகள்,

எங்களின் குடும்பங்கள் எல்லாம் அன்பை கொட்டும் கூட்டுக் குடும்பங்கள், உங்களைப்போன்று தனிக்குடித்தனம் அல்ல,

எங்கள் தலைமுறையினர் எல்லோரும் பெற்றோர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வளர்ந்தோம்.

பெற்றோர்களும் பிள்ளைகளின் உணர்வுக்கு மிகுந்த மதிப்பளித்தார்கள்,

சுருக்கமாக சொன்னால்,
WE ARE THE LIMITED EDITIONS..
ஆகவே எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்… அன்பாக இருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *