இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டி-20 கிரிக்கெட் போட்டியில் சுற்றுலா நியூசிலாந்து அணி 05 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
தம்புள்ளையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அதிகபட்சமாக Will Young 30 ஓட்டங்களையும், Josh Clarkson 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Wanindu Hasaranga 04 விக்கெட்டுக்களையும் Matheesha Pathirana 03 விக்கெட்டுக்களையும், Nuwan Thushara 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
பின்னர் 109 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Pathum Nissanka அதிகபட்சமாக 52 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.
பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் Lockie Ferguson மற்றும் Glenn Phillips ஆகியோர் தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதன்படி இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டி-20 கிரிக்கெட் தொடர் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.