தம்பி அகீதின் மரணச் செய்தியை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கின்றது
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்
செவ்வாய்க்கிழமை (விபத்து நடந்த தினம்) பலத்த காற்றுடன் கூடிய இடைவிடாத, மழைப்பொழுது நேரம். பிற்பகல் 1.45 மணியளவில் அலுவலுக வேலையை முடித்துவிட்டு, வீடு திரும்பும் வழியில் தம்பி Mohamed Akeeth அல்-ஹிலால் பாடசாலை வீதியில் நடந்து வரும்போது, 5-10 நிமிடங்கள் புண்ணகை செய்த முகத்துடன் பேசிய நினைவுகள், கண் எதிராக வந்து செல்கின்றது.
அமைதியான குணம். எங்கு கண்டாலும் சிரித்த முகத்துடனும் ஏனையவருக்கு உதவிசெய்யக்கூடிய நல்லுள்ளம் கொண்டவனை இறைவனும் அழைத்துவிட்டான்.
ஒரு மனிதனின் அஜல் முடிந்து விட்டால், ஒரு நிமிடம் முந்தாது, ஒரு நிமிடம் பிந்தாது, உரிய நேரத்தில் உயிர் வாங்கப்படும்.
ஆகவே இப்படி நடந்தால், நடந்திருக்காது, அப்படி நடந்திருந்தால் நடந்திருக்காது என்ற தேவையற்ற வார்த்தைகளை தவிர்த்து, எமது சகோதரனின் மறுமை வாழ்க்கைக்காக இறைவனிடம் பிரார்த்தித்து கொள்வோம்.
வல்ல ரஹ்மான் மரணித்த மாணவர்களுக்கு ஸஹீதுடைய அந்தஸ்தை வழங்குவானாக…
அவர்களது பெற்றோர்களுக்கும் மன ஆறுதலையும் மேலான நற்பாக்கியங்களையும் வழங்குவானாக…🤲🏻🤲🏻