• Sat. Oct 11th, 2025

நாட்டில் எயிட்ஸ் நோய் பரவல் அதிகரிப்பு

Byadmin

Dec 1, 2024

உலக எய்ட்ஸ் தினம் இன்றாகும்.

முழு உலகத்துடன் ஒப்பிடும் போது, ​​இலங்கை எயிட்ஸ் நோய் பரவல் குறைவாக உள்ள நாடாகக் கருதப்படுகிறது.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு இலங்கையில் எயிட்ஸ் பரவல் அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குனர், சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் விந்தியா குமாரிபெலி, கடந்த 2020-21ம் ஆண்டை விட 2022-23ம் ஆண்டிலேயே எய்ட்ஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

“2020-2021 ஆண்டுகளில், 200-300 எய்ட்ஸ் நோயார்கள் பதிவாகியிருந்தனர்.

ஆனால் 2022-2023ல் நிலைமை இரட்டிப்பாகியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில், ஆண்களிடையே புதிய எய்ட்ஸ் நோயாளர்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன.

அந்த நோயாளிகளில் 15% பேர் 15-24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆகும்.

இதேவேளை, உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவனி இன்று காலிமுகத்திடல் மைதானத்தில் இருந்து ஆரம்பமாகி சுகாதார அமைச்சு வரை சென்றுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எயிட்ஸ் நோயை நாட்டிலிருந்து இல்லாதொழிக்கும் கருணையுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *