• Sun. Oct 12th, 2025

ஜனாதிபதிக்கும் 7 வயது முஸ்லிம் சிறுமிக்கும், நடந்த உரையாடல் ( வீடியோ)

Byadmin

Oct 14, 2017
தனது பெற்றோருடன் பதுளையில் இருந்து ஜனாதிபதியை பார்க்க சிறுமியொருவர் வந்துள்ளார்.
ஏழு வயதான எம்.என்.அமானி ராயிதா என்ற சிறுமியே ஜனாதிபதியை மைத்திரிபால சிறிசேனவை நேற்று சந்திக்க வந்துள்ளார்.
எனினும் ஜனாதிபதியை சந்திக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்குமா என்ற நம்பிக்கை அவரை பார்க்கும் வரை அச்சிறுமிக்கு  இருக்கவில்லை.
தன்னை பார்க்க எதிர்பார்ப்புடன் வந்துள்ள அந்த சிறுமி, ஜனாதிபதி செயலத்தின் முன்னாள் காத்திருப்பதை ஜனாதிபதி அறிந்து கொண்டுள்ளார்.
எவ்வளவு வேலை பழு இருந்தாலும், தன்னை ஆவலுடன் சந்திக்க வந்த சிறுமியின் ஆசையை நிறைவேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிதும் தயங்கவில்லை.
பின்னர் அதிகாரிகளை அனுப்பி அந்த சிறுமியை அழைத்து வந்த ஜனாதிபதி ,அவரிடம் உரையாடினார்.
பாசத்துடன் ஜனாதிபதியுடன் உரையாற்றிய அந்த சிறுமி தன்னால் வரையப்பட்ட ஜனாதிபதியின் உருப்படத்தை அவரிடம் கொடுத்துள்ளார்.
மேலும் இந்த படத்தை அங்கு சுவற்றில் மாட்டி வைக்குமாறு ஜனாதிபதியிடம் கூறினார்.
அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, தன்னை மீண்டும் காண அச்சிறுமிக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *