பொதுபல சேனா செயலாளர் ஞானசாரருக்கு எதிரான வழக்குகளைஒருபோதும் வாபஸ் வாங்கப் போவதில்லையென மூத்த முஸ்லிம்சட்டத்தரணியும், முஸ்லிம் சமூக ஆர்வலரும், கொழும்பு பள்ளிவாசல்கள்சம்மேளன செயலாளருமான சிராஸ் நூர்தீன் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
ஞானசாரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறப் போவதாக சிலதகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சிராஸ் நூர்தீனிடம்தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்,
அவர் மேலும் கூறியதாவது,
ஞானசாரர் தொடர்புடைய வழக்குகளை சட்டமா அதிபரே கையாள்கிறார். முஸ்லிம் சமூகத்தின் நலன்களின் மீது அக்கறை கொண்ட ஒருசட்டத்தரணியே நான். சட்டத்தரணி என்றவகையில் என்னால்கூடஞானசாரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்கமுடியாது.
முஸ்லிம் சமூகம் என்மீது நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த நம்பிக்கைகாற்றில் பறக்கும் படியாகவோ அல்லது முஸ்லிம் சமூகத்தைகாட்டிக்கொடுக்கும் படியாகவோ எனது செயற்பாடுகள் ஒருபோதும்அமையாது.
மேலும் இங்கு சகலரும் அறியவேண்டிய ஒருவிடயம் உள்ளது.
அதாவது ஞானசாரருக்கு எதிராக முஸ்லிம்கள் தரப்பிலிருந்து, முஸ்லிம்சட்டத்தரணிகளாகிய நாம் தொடுத்த இந்த வழக்கினாலேயே,ஞானசாரர்ஓரளவுக்கேனும் அமைதியாகவுள்ளார்.
இந்த வழக்குகளை நாம் தொடுத்திராவிட்டால், ஞானசாரரின் ஆட்டம்இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.
அத்துடன் ஞானசாரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்கிவிட்டால், அவர் திருந்தி விடுவதற்கான எத்தகைய உத்தரவாதங்களும் நம்மிடம்இல்லை.
இந்தநிலையில் ஞானசாரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்குவதுஎந்தவகையில் நியாயம்..?
எனவே ஞானசாருக்கு எதிராக, நாம் தொடுத்த வழக்குகளை வாபஸ்வாங்கமாட்டோம் என்பதை முழு முஸ்லிம் சமூகத்திற்கும் மிகுந்தபொறுப்புடனும், திட்டவட்டமாகவும் கூறிக்கொள்ள விரும்புகிறோம் எனவும் சிராஸ் நூர்தீன் மேலும் தெரிவித்தார்.