• Mon. Oct 13th, 2025

5,415 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Byadmin

Jan 2, 2025

இன்று (02) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கையின் ஊடாக மதுபோதையில் வாகனம் செலுத்திய 509 சாரதிகளுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்போது கவனக்குறைவாகவும் அபாயகரமாகவும் வாகனம் செலுத்திய 29 சாரதிகள், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 59 சாரதிகள், போக்குவரத்து விதிகளை மீறிய 762 சாரதிகள், உரிமத்தை மீறிய 345 சாரதிகள் மற்றும் இதர போக்குவரத்து விதிமீறலில் தொடர்புடைய 3,711 சாரதிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த 24 மணித்தியாலங்களில் மொத்த போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 5,415 சாரதிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

இந்த விசேட நடவடிக்கை மேலும் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், மதுபோதையில் வாகனம் செலுத்த வேண்டாம் எனவும், போக்குவரத்து விதிமீறல்கள் உட்பட ஏனைய போக்குவரத்து விதிகளை மீற வேண்டாம் எனவும் இலங்கை பொலிஸார், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில், பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கை 23.12.2024 முதல் ஆரம்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *