• Mon. Oct 13th, 2025

நெல் விவசாயிகளுக்கு மற்றுமொரு நெருக்கடி

Byadmin

Jan 6, 2025

கடந்த காலங்களில் இயற்கை அனர்த்தங்கள் உட்பட பல நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு இன்று மற்றுமொரு அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இனந்தெரியாத புழு இனத்தினால் பல பிரதேசங்களில் நெற்பயிர்ச் செய்கை சேதப்படுத்தப்பட்டமையே இதற்குக் காரணமாகும்.

அநுராதபுரம் மாவட்டத்தில் அநுராதபுரம், ஓயாமடுவ, விளாச்சிய போன்ற பிரதேசங்களில் இந்த புழுத் தொல்லையால் நெற்பயிர்ச் செய்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தினாலும் புழுக்களின் தொல்லையை கட்டுப்படுத்த முடியவில்லை என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் புழுக்களின் தொல்லையால் விளைச்சல் வேகமாக குறையும் அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த புழு தொல்லையை தடுக்க, சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், மற்றை பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *