• Sat. Oct 11th, 2025

இதில் ஒரு டம்ளர் குடிங்க… எப்படிப்பட்ட சுளுக்கும் காணாமல் போயிடும்!!!!

Byadmin

Sep 21, 2025

சில சமயம் கவனம் இல்லாமல் கை, காலை எங்காவது கவனிக்காமல் நீட்டியிருப்போம். சுளுக்கு பிடித்துவிடும். என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருப்போம். குறிப்பாக, மிக அதிகமாக கழுத்தும் இடுப்பும் தான் சுளுக்குப் பிடிக்கும்.

இதற்கு என்ன மருந்து சாப்பிடுவது என்று நமக்குத் தெரியாது. அதவா சரியாகட்டும் என்று கழுத்தை திருப்பிக் கொண்டே உட்கார்ந்திருப்போம்.

ஆனால் வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்குமே நம்முடைய சித்த மருத்துவத்தில் முழுமையான நிவாரணம் உண்டு.

ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். அதை அரை டம்ளரா சுண்ட வைத்து பெரியவங்களுக்குத் தரலாம்.

அதோடு, 5 கிராம் முருங்கைப்பட்டை, ஒரு சிறுதுண்டு சுக்கு, புளியங்கொட்டை அளவு பெருங்காயம், ஒரு டீஸ்பூன் கடுகு ஆகியவற்றை எடுத்து, தண்ணீர் விட்டு மை போல அரைத்து கூழான பதத்தில் கரண்டியில வைத்து லேசாக சூடேற்ற வேண்டும். பின் இளஞ்சூட்டில் அதை சுளுக்கோ, வாய்வுப் பிடிப்போ இருக்கும் இடத்தில் பற்றுப்போட்டு வர வேண்டும். இதை இரவில் போட்டு, காலையில கழுவி விட வேண்டும்.

வாதநாராயணன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து, அதைப் பச்சையாக அரைத்து, வாய்வுப் பிடிப்பு/சுளுக்கு உள்ள இடத்தில் பற்றுப்போட்டு 3 மணி நேரம் வைத்திருந்து பின் கழுவ வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *