• Sun. Oct 12th, 2025

பாஸ்மதி போன்று வேறு வகை அரிசி சந்தையில்?

Byadmin

Jan 10, 2025

அரிசி இறக்குமதி செய்ய அரசாங்கம் வழங்கிய அனுமதியைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் குழு தொடர்பில் ‘அத தெரண’வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் ஆராய்ந்த போது, பாஸ்மதி அரிசியைப் போன்ற ஒரு வகை அரிசி குறைந்த விலையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு பாஸ்மதி அரிசியாக சந்தைப்படுத்தப்படுவது தெரியவந்ததுள்ளது.

பாஸ்மதி அரிசியை எந்த நேரத்திலும் நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியும் என்பதோடு, ஒரு கிலோ அரிசிக்கு 300 ரூபாவுக்கும் அதிகமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நாட்டில் ரூ.220 முதல் 250 வரை விற்கக்கூடிய பாஸ்மதி அரிசியைப் போன்ற ஒரு வகை அரிசி, ஒரு கிலோவுக்கு ரூ.65 வரி செலுத்தி நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இந்த விடயம், தொடர்பாக ‘அத தெரண’ சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்க பணிப்பாளர் ஜெனரல் சீவலி அருக்கோடவிடம் வினவியது.

நாட்டிற்கு வரும் அரிசி இருப்புகளின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பப்பட்டால் மாத்திரமே அவை பாஸ்மதி அரிசியா இல்லை என்பது தொடர்பில் அடையாளம் காணமுடியும் என அவர் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க சுங்கத் துறைக்கு எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை என்றும், இது தொடர்பான அதிகாரம் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடமே உள்ளது என்றும் சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *