• Sun. Oct 12th, 2025

விடைத்தாள் மதிப்பீட்டுக்காக கவுன் அணிந்து வந்த ஆசிரியர்கள்

Byadmin

Jan 17, 2025

பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்தில் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக கவுன் அணிந்து வந்த பெண் ஆசிரியைகள் குழுவை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (16) பாடசாலை நடைபெறும் நாள் என்ற காரணத்தினால், பாடசாலைக்குள் பிரவேசிப்பதாயின் சேலை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், மேற்படி ஆசிரியர்கள் கவுன் அணிந்து வந்ததால், பாடசாலைக்குள் அனுமதிக்க அதிபர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் பரீட்சைகள் ஆணையாளரின் கட்டுப்பாட்டில் இடம்பெறுவதால், இது தொடர்பில் பாடசாலை அதிபருக்கு பொறுப்புக்கூற வேண்டிய அவசியமில்லை என விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வந்த ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

எனினும், பாடசாலைக்கு என்று ஒரு குறிப்பிட்ட ஒழுக்கம் இருப்பதாகவும், பாடசாலைக்கு வரும் அனைவரும் அதைப் பின்பற்ற வேண்டும் என்று அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இரு குழுக்களுக்கும் இடையே சில வாக்குவாதங்கள் நடந்தன, அதைக் கட்டுப்படுத்த பொலிஸாரை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இருப்பினும், இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்ட முடியாததால், விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்தை தற்காலிகமாக மூடுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அத தெரண செய்திப்பிரிவு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தரவிடம் வினவிய போது, இன்று (17) இடம்பெறவுள்ள கலந்துரையாடல்களின் பின்னர் இது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *