• Sun. Oct 12th, 2025

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Byadmin

Jan 19, 2025

மண்சரிவு தொடர்பான முன்கூட்டியே எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (19) காலை 8:00 மணி முதல் நாளை காலை 8:00 மணி வரை அமுலில் இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கண்டி மாவட்டத்தில் உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தில் யடவத்த, உக்குவெல, ரத்தோட்டை மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ளோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பதுளை மாவட்டத்தில் பதுளை, பசறை, ஹாலிஎல, கண்டி மாவட்டத்தில் மெததும்பர, பாததும்பர, தொலுவ, குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம, மாத்தளை மாவட்டத்தில் லக்கல பல்லேகம, அம்பன்கங்கை கோரளை, பல்லேபொல, மாத்தளை மற்றும் நாவுல ஆகிய பிரதேச செயல பிரிவுகளில் வசிப்போர் அவதானமாக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *