தற்போதைய அரசாங்கம் மட்டுமல்ல, முந்தைய அரசாங்கங்களும் உப்பை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இதுவரை 4,050 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள உப்பு இருப்பை தனியார் இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சின் மூலம் இறக்குமதி செய்ய முடியும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வருடாந்திர உப்புத் தேவை 180,000 மெட்ரிக் தொன் எனவும், சீரற்ற வானிலை காரணமாக, இந்நாட்டு உப்பு உற்பத்தி 120,000 மெட்ரிக் தொன்னாக குறைந்துள்ளது.
அதன்படி, 60,000 மெட்ரிக் தொன் பற்றாக்குறை இருப்பதாகக் கூறிய அமைச்சர், அதில் ஒரு பகுதியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.