எதிர்வரும் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி மாலை 04 மணிக்கு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெறவுள்ள முன்னாள் அமைச்சர் ஏ எச் எம் அஸ்வரின் நினைவுக் கூட்டம் மற்றும் நூல் வெளியீடு ஆகியவை சம்பந்தமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று கடந்த வியாழக்கிழமை (17/10/2017) இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம், அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு, முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் அமைப்பாளர் சத்தார், மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜி மற்றும் முஸ்லிம் வொய்ஸ் சஹீர்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்ச்சியில் கௌரவ அதிதியாகக் கலந்துகொள்ளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சமகாலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பாதகங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப் பட்டது.
சபாநாயகர் கரு ஜெயசூரிய பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் அகில இந்திய முஸ்லிம் லீக்கின் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொள்வார்.
ஏ எச் எம் அஸ்வர் ஆங்கிலத்தில் எழுதிய அவரது சுயசரிதை நூல் இந்நிகழ்வில் வெளியிடப்படவுள்ளது. என்பதும் குறிப்பிடத் தக்கது.