இஸ்லாமிய நாகரீகம் அது அல்லாத ஏனைய நாகரீகங்களை விட தன் இலக்கிலும் அடிப்படையிலும் தனியாகவே காணப்படுகிறது.
இஸ்லாமிய நாகரீகம் தன்னை குர்ஆண் மற்றும் சுன்னா வழியில் வழிகாட்டுகிறது. இன்னும் மனித வாழ்விற்க்கு ஒரு சிறந்த நாகரீகமாகவும் உள்ளது.
ஏனென்றால் அது வாழ்வின் அனைத்து பகுதியையும் (வெளிரங்கமான, உள்ரங்கமான விடயங்களிலும்) உள்ளடக்கிக்கொண்டுள்ளது.
இஸ்லாமிய நாகரீகம் அல்லாஹு தஆலாவின் அடிப்படை தூதுவின் மூலம் வழங்கப்பட்டதும், இன்னும் அதனை ஸஹாபாக்கள் தன் வாழ்வின் நாகரீகமாகவும் ஏற்றுக்கொண்டு அதன்படி வாழ்ந்திருக்கிறார்கள்.
இன்னும் இஸ்லாமிய நாகரீகம் வாழ்வை மார்கத்தை விட்டும் தூரமாக்கவுமில்லை, வாழ்விற்கு தேவையான அனைத்து பகுதியையும், சம உரிமையையும் அளித்துள்ளது.
இஸ்லாம் மனிதனுக்கு கொள்கை, வணக்க வழிப்பாடு, நற்குணங்கள் போன்றவைகளை கற்றுக்கொடுத்துள்ளது. இஸ்லாமிய நாகரீகம் பூர்த்தியான வாழ்க்கை திட்டமாகவே அமைந்துள்ளது.
மேற்கத்தைய நாகரீகம் புத்தியையும், பலத்தையும் மாத்திரம் நம்புகின்ற ஒரு கூட்டமாகவே இருக்கிறது.
அவர்கள் வாழ்வை மார்கத்தை விட்டும் பிரித்து வாழும் ஒரு சமூகம், அவர்களிடம் மார்க்கத்தினால் வாழ்வில் எந்த ஒரு பயனுமில்லை. எனவேதான் அவர்கள் மனித இலாபத்தை இலக்காகக்கொண்டுள்ளார்கள்.
மனிதநயம், ஆன்மீகம் போன்றவற்றினால் அவர்கள் வாழ்வில் எந்த ஒரு பெருமதியும் இல்லை.
தற்கால மேற்கத்தைய நாகரீகம் வெறுமணே மனோ இச்சைக்களை மாத்திரம் பின்பற்றிக்கொண்டு வாழ்வின் முக்கிய பகுதிகளை கோட்டை விடுகின்றார்கள். இன்னும் வீணான நாகரீகத்திலும் இருக்கின்றார்கள்.
அவர்களின் நாகரீகத்தில் இஸ்லாமிய நாகரீகம் போன்று அல்லாமல் எந்த ஒரு இலக்குமில்லாமலும், எந்த ஒரு அடிப்படையுமிள்ளமலும் வாழ்கின்றார்கள்.
இஸ்லாமிய நாகரீகம் உள்ரங்க, வெளிரங்க பல மனித தேவைகளை கொடுத்துக்கொண்டுள்ளது. ஆனால் மேற்கத்தைய நாகரீகம் வெளிரங்க பிரயோசனம்கலில் மாத்திரம் நின்றுள்ளது, இன்னும் தன் மனோ இச்சை படி சட்டம் வகுத்துக்கொண்டுள்ளார்கள்.
என்ற போதும் இஸ்லாமிய நாகரீகம் வரலாற்றிலும், மார்கத்திலும் ஆழ்ந்த ஓர் இடத்தை பிடித்துள்ளது. அது வனக்கவழிப்பாடுகளிலும், நல்ல முயற்சிகளிலும் இன்னும் தேவை காணுகிறது. அதன் மூலம் தன் நாகரீகத்தை இன்னும் வலுமைப்படுத்துவதும் அவசியமாகும்.