இஸ்லாம் என்பது ஒரு “ மதம் அல்ல, அது ஓரு “ மார்க்கம்” உலகில் தற்போது வேகமாக பரவி வரும் மார்க்கம் இது மட்டுமே என BBC News தனது ஆராய்ச்சியில் கூறி இருந்தது.
இம்மார்க்க ஒழுங்கவியலை விமர்சிப்பவர்களின் இலவச விளம்பரம் காரணமாக “ அல் குர்ஆனை ஆராய முற்பட்டதன் பிரதிபலன் அவர்களில் பாதிக்கு அதிகமானோர் இஸ்லாம் மார்க்கம் தான் கடவுள் தருவித்த இறுதி வேதம் என உறுதி கொண்டு அதனை ஏற்று ஓரிறைக்கொள்கையை நடை முறைப்படுத்தியதுதான்.
காலத்தை வென்று வரும் இஸ்லாம் அறிவியல் ரீதியாகவும், சமூக – பொருளாதார ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஆய்வு செய்யப்பட்டவாறுதான் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “ இஸ்லாம் உயர்வடையவே செய்யும். அதனை யாரும் தடுக்கவும் முடியாது நிறுத்தவும் முடியாது.
மேலும், இஸ்லாம் பெண்ணியத்திற்கு எதிரானது, ஆணாதிக்கத்தை வளர்க்கிறது. பெண் சுதந்திரத்தை வழிமறிக்கிறது, என்று போலிப் பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில்தான் மேற்குலகில் நடிகைகளும், பாப் பாடகிகளும்,பத்திரிக்கையாளர்களும் இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர்.
*-அமெரிக்க நடிகை சாரா புக்கர்
*-பிரிட்டீஷ் பத்திரிக்கையாளர் மரியம் -பிரான்ஸியஸ்
*மறைந்த மீக்காயில் ஜாக்ஸனின் சகோதரியும் பாப் பாடகியுமான ஜானட் ஜாக்ஸன்
*நேபாள நடிகை பூஜா லாமா
*பிலிப்பைன்ஸ் நடிகை குயினி பாடில்லா
*இந்திய நடிகை மோனிகா
தென்னிந்திய இசை அமைப்பாளரகளான – A.R.ரஹ்மான், மற்றும் யுவன் சங்கர் ராஜா போன்று இன்னும் பலர் இஸ்லாத்தை ஏற்றவர்களில் பிரபலமானவர்கள். இவர்கள் அனைவருமே இஸ்லாத்தின் சமூக ஒழுக்கத்தினால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றவர்கள். இஸ்லாம் பெண் சுதந்திரத்திற்கு எதிரானது என்று வலுவான முறையில் பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில்தான் விரும்பியபடி’ முழு சுதந்திரத்தை அனுபவித்து வாழ்ந்த நடிகைகள் இஸ்லாத்தை ஏற்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது
இஸ்லாத்தை ஏற்ற பின்பு அந்நடிகைகள் தங்களின் பழைய காலங்களை நினைத்து இப்படியெல்லாம் ‘அனிமல்ஸ் வாழ்க்கை’ வாழ்ந்து விட்டோமே என்று கண்ணீர் விட்டு கதறி அழுவதை இணையதளங்களில் காணலாம். இஸ்லாத்தின் எல்லா சட்டங்களும், அறநெறிகளும். திருக்குர்ஆனின் வரிகளும் இஸ்லாம் ‘சத்திய மார்க்கம்’ என்பதற்கு சாட்சியங்களாக திகழ்கின்றன. இஸ்லாத்தை ஓர் ஒழுக்க நெறியாக பார்ப்பவர்கள் அதற்காக தங்களை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்கிறார்கள்.
அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளுக்கு திருக்குர்ஆன் உடன்படுவதைப் பார்த்து இஸ்லாத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். பொருளாதார மேதைகள் இஸ்லாத்தின் வெற்றிகரமான பொருளியல் திட்டங்களை ஆராய்ச்சி செய்து, ஆச்சரியப்பட்டவர்களாக இஸ்லாத்தில் இணைகின்றனர்.
உளவியல் ஆய்வாளர்கள் மனோ தத்துவ ரீதியாக இஸ்லாம் மனித இனத்தை பக்குவப்படுத்துவதை புரிந்து இஸ்லாத்தில் சேர்கின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக எனதருமை மானசீக அறிஞர் இந்திய மற்றும் அமெரிக்காவில் உளவியல் பிரபலம் Dr. அப்துல்லாஹ் பெரியார்தாசன் கடவுள் இல்லாக்கொள்கையில் இருந்து அதன் பின்னர் கடவுள் என்ற ஓர் ஆளுமை இன்றி இப்பிரபஞ்சம் கட்டுக்கோப்பாக இயங்க சாத்தியம் இல்லை என்பதை அறிந்து, அதன் காரணமாக, அவர்கள் ஹிந்து/கிறிஸ்தவம்/ பொளத்த மதங்களையும் தழுவி அம்மதங்களிலும் தான் தேடிய கடவுள் இல்லை என்பதால் , இறுதியில் இஸ்லாத்தை ஏற்று அல் குர்ஆனை பத்து வறுட காலமாக ஆராய்ந்ததன் விளைவு “ தான் தேடிய அக்கடவுள் அகிலத்தார் அணைவருக்கும் ஓரே கடவுள் அல்லாஹ் த ஆலா ஓழுவன்தான்” என்ற பேருண்மையை உணர்ந்து சற்றும் தாமதியாது அப்போது தொழில் நிமித்தம் அமெரிக்காவில் இருந்த அவர்கள் உடனடியாக மக்கா வந்து க௰பதுல்லாஹ்வை தரிசித்தவாறே இஸ்லாம் மார்க்கத்தையும் சுவைக்க தொடங்கியதுடன் நின்று விடாது முழு நேர மார்க்க போதகராக வடிவம் பெற்று சென்ற வறுடங்களுக்கு முன்னர் இறையடி சேர்ந்த அப்புத அம்மகானை குறிப்பிடலாம். அன்னாரை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக.
மேலும் .வரலாற்றாய்வாளர்கள் ஆச்சரியங்களும், அதிசயங்களும் அடங்கிய இஸ்லாமிய வரலாற்றையும், நபி(ஸல்) அவர்களின் வரலாற்றையும் படித்து இஸ்லாத்தை ஏற்கின்றனர்.இன்னும் ஏற்றவாரே உள்ளனர்.
துரைசார் உளவியல் வல்லுனர்களில் பலர் வேதங்களின் அடிப்படையிலும் விஞ்ஞான அடிப்படையிலும் மனிதனின் உள்ளம் பற்றிய பிரச்சினைகளின் தீர்வைகளில் மாறுபட்ட கருத்துக்களிலேயே உள்ளனர். நம் மன ஓட்டத்தை சிலநேரம் நம்மாலேயே புரிந்துக்கொள்ள முடியாது. ஒரு தவறான செயலை நாம் செய்ய முயலும் போது உள்ளிருந்து ஒரு குரல் ‘வேண்டாம் இதை செய்யாதே ‘ என்று கட்டளை இடும். இதைதான் நாம் மனசாட்சி என்று சொல்கிறோம். உண்மையில் மனம் நம்மை பெரும்பாலும் தவறிழைக்க விடுவதில்லை. அப்படியே தவறு செய்தாலும் சில நேரங்களில் அடிக்கடி நாம் செய்த தவறை சுட்டி காட்டி உணர்த்தி கொண்டே இருக்கும். அந்த உறுத்தல் அதிகமாகினால் நம்மால் இயல்பாக இருப்பது தவிர்க்கப்படுகிறது.
இதனைத்தான் இறைதூதர் முஹம்மத் (ஸல்) கூறினார்கள். “எந்த ஓரு மனிதனை இறைவன் நேசிக்கிறானோ “அம்மனிதன் தவறு செய்ய நினைக்கையிலேயே அதனை அவன் உள்ளம் செய்யவிடாது தடுப்பதில் உள்ளம் குற்ற உணர்வை ஏற்படுத்துமாம். இது விடயமாக இறை வசனங்களும் நபி மொழிகளும் நிறைந்தே காணப்படுகின்றன .
இதை சென்ற நூற்றாண்டைய பிரபல உளவியல் நிபுணர் கண்டுபிடித்தவரில் ஒருவர், பிரசித்திபெற்ற Dynamic Psychology) “ சிக்மண்ட் பிராய்ட்” என்பவர் ஆகும்…
நான் “ மனித உளவியல் தாக்கங்களுக்கு நிரந்தர தீர்வு “ அல் குர்ஆனில் உள்ளது “ என்பதை சான்று பகர்வேன். நாம்தான் அதை கற்றுக்கொள்ள தவறிவிடுகிறோம்…
-Nawas Dawood-