• Mon. Oct 13th, 2025

கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 203 பேர் பலி

Byadmin

Feb 11, 2025

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட வீதி விபத்துகளில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஜனவரி 1 முதல் பெப்ரவரி 7 வரை இடம்பெற்ற வீதி விபத்துகளில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டில், கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் 1,585 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ள நிலையில் 1,667 பேர் உயிரிழந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

2025 ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 7 ஆம் திகதி  வரை 194 கோர வீதி விபத்துக்களும் 514 கடுமையான வீதி விபத்துக்களும் மற்றும் 880 சிறியளவிலான வீதி விபத்துக்களும் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இந்த விபத்துக்கள் அனைத்தும்  2025 பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி வரை பதிவாகியுள்ளன. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 203 ஆகும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *