• Sun. Oct 12th, 2025

அதிக நீரைப் பருகுமாறும் கோரிக்கை

Byadmin

Feb 20, 2025

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் பல பகுதிகளில் மழை பெய்தாலும் சில இடங்களில் அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை பதிவாகக் கூடுமென கூறப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக பணியிடங்களில் இருக்கும் போது அதிக நீரைப் பருகுமாறும் சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர். 

அத்துடன், வீடுகளில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் சிறுவர்களை வாகனங்களில் தனியாக விட்டுச் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *