• Sat. Apr 4th, 2026

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Byadmin

Mar 1, 2025

தொடர்ந்து பெய்து வரும் மழையால் 2 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதன்படி, பதுளை மாவட்டத்தில் கந்தகெட்டிய, பசறை, ஹாலிஎல, பதுளை, ஹப்புத்தளை, மீகஹகிவுல, ஊவா பரணகம மற்றும் சொரணாதொட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று மதியம் 12.30 மணி முதல் நாளை மதியம் 12.30 மணி வரை அமுலில் இருக்கும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *