• Sun. Oct 12th, 2025

கந்தபளை விபத்தில் மூவர் காயம்

Byadmin

Mar 11, 2025

கந்தபளையில் இருந்து நுவரெலியா நகரத்திற்குச் சென்ற கார் ஒன்று, வீதியை விட்டு விலகி, தேயிலைத் தோட்டத்தில் சுமார் 15 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில், காரில் பயணித்த ஒரு முன்பள்ளி மாணவி, அவரது தாயார் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து, நுவரெலியா-கந்தபளை பிரதான வீதியில் உள்ள பொரலந்த பகுதியில் திங்கட்கிழமை (10) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நுவரெலியா காவல்துறை போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள், கடந்த 10 ஆம் திகதி பெய்த கனமழை காரணமாக கந்தபொல மற்றும் பொரலந்த பகுதிகளில் சென்று கொண்டிருந்த மோட்டார் வாகனம் சறுக்கி பள்ளத்தாக்கில் விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *