இலங்கையணி இப்போது தோற்பது வாடிக்கையாகிவிட்டது.ஆனால் அவர்கள் தோற்கும்விதம் ரசிகர்களிடத்தில் மிகுந்த கோபத்தையும் ,ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
.கடந்த 2 வருடத்துக்கு முன்வரை பல வெற்றிகளுக்கும் ,சாதனைகளுக்கும் சொந்தமான அணியின் தற்போதைய நிலையைக் கண்டு கிரிக்கெட் உலகே நகைக்கிறது… என்ன சாதி கிரிக்கெட் அணிடா என்று….
வெட்கித்தலை குனியவேண்டிய நிலைக்கு இலங்கையணி ஆளாகிவிட்டது..
இவர்களின் பார்வையில் கிரிக்கெட் விளையாடுவதைக்கூட கல்விக்கூடம் நடத்தி பேப்பரில் குறிப்பெழுதி மனப்பாடம் செய்து மைதானத்துக்கு அனுப்பவேண்டும்போல.
இதுவொரு விளையாட்டுதானே.இதைக்கூட டாக்டர் ,எஞ்சினியர் படிப்புத் தரத்துக்கு கஸ்டமாக்கி வைத்துள்ளார்கள்.
அணிக்கு வருகின்ற புது வீரர்கள் அப்படித்தான் என்றால் ,அனுபவ வீரர்களென்று 7,8 வருசமா விளையாடுபவர்களும் புதுசுகளைவிட மோசமாக விளையாடுவது ரசிகர்களிடத்தில் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. .
மற்ற நாட்டு கிரிக்கெட் அணியினர் என்ன அழகாக விளையாடுகின்றனர். அவர்களுடைய அனுபவ வீரர்கள் ,புதுமுக வீரர்கள் என சகலரும் கலக்குகின்றனர். இத்தனைக்கும் கிரிக்கட்டில் கலாநிதிப் பட்டம் முடிச்சு வந்தவர்களா? இல்லையே !
அல்லது இலங்கை கிரிக்கெட் நிருவாகத்தினர் தோற்கும்போதெல்லாம் வழக்கமாக ஒன்று சொல்வார்களே ,எங்கள் அணி அனுபவற்ற வீரர்களைக் கொண்டதென்று.இப்படியாவது சொல்வதுண்டா ?
இல்லை.இலங்கை வீரர்களைப் போலவே கீழ்நிலை படிகளில் திறமையாக விளையாடி மேலே வந்தவர்கள். எனினும் அவர்களால் சிறப்பாக விளையாட முடிகிறது.இலங்கை வீரர்களால் முடியவில்லை.
.இனியும் இந்த வீரர்களை வைத்துக்கொண்டு இலங்கை வெற்றி பெறும் என்பதில் ரசிகர்கள் நம்பிக்கையிழந்துள்ளனர்.இப்படியே தொடர்ந்தால் இலங்கை கிரிக்கெட்டுக்கு முடிவுரை எழுதவேண்டி ஏற்படலாம்
ஆக்கம் By ABM azeem