• Sun. Oct 12th, 2025

அமெரிக்காவை விட, காசா 4250 ஆண்டுகள் பழைமையானது

Byadmin

Mar 22, 2025

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிராம் காசா பற்றி கூறிய கருத்து சர்வதேச ரீதியில் மிகப்பெரிய பேசு பொருளாக உள்ளது. அதாவது “காஸா மக்களை அங்கிருந்து வெளியேற்றி வேறு நாடுகளில் குடியேற்றப் போவதாகவும் காஸாவை சுற்றுலாத் தளமாக மாற்றப் போவதாகவும்” அவர் கூறியிருந்தார். பலஸ்தீன ஒருமைப்பாட்டு குழுவின் தலைவர் என்ற வகையிலும் சிரேஷ்ட அமைச்சர் என்ற வகையிலும் இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தெளிவாகவே அது இனவெறியின் வெளிப்பாடு. ஒருபோதும் ட்ரம்ப்பால் அதனை செய்ய முடியாது. அமெரிக்காவை விட காசா 4250 ஆண்டுகள் பழைமையானது. எனவே அது ஒருபோதும் நடைபெறாது. பலஸ்தீன் காணப்படுவது ஹமாசின் துப்பாக்கி முனையில் அல்ல, மாறாக சர்வதேச நாடுகளின் இறையாண்மையில் ஆகும். ஆகவே நிச்சயமாக ஒரு நாள் பலஸ்தீன் விடுதலை அடையும். ட்ரம்ப் செய்வது ஒருபோதும் வெற்றி பெற முடியாத ஒரு யுத்தத்தை ஆகும். உண்மையில் அமெரிக்காவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது முதலாளித்துவத்தின் ஒரு மோசமான விடயம். பணம் படைத்தவர்கள் தங்களால் அனைத்தையும் செய்யலாம் என நினைப்பார்கள். அது அவ்வாறு அல்ல. துப்பாக்கிகளை விட மக்கள் பலம் பொருந்தியவர்கள். சுதந்திர பாலஸ்தீனத்தின் உருவாக்கம் காலத்தின் மீது தங்கியுள்ள ஒரு விடயம்.-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *